ஸ்டைலிஷ் லுக்கில் மாஸ் காட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் பத்து தல திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் STR 48 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மலேசியாவில் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று இருந்த சிம்புவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.