Simbu

Simbu Movie : நடிகர் சிம்பு வில்லனாக புது அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு உடல் எடையை குறைப்பதற்காக வெளிநாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். அதன் பின்னர் மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கீதா கோவிந்தம் நாயகி? – ஹீரோ யார் தெரியுமா?

இந்நிலையில் தற்போது சிம்புவின் புதிய படம் பற்றிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், mufti என்ற கன்னட படத்தின் ரீமேக்கில் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க சிம்புவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

அதே போல் இதே ரோலுக்கு சரத்குமாரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இறுதியில் யார் கமிட்டாவார்கள் என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.