Rashmika

Rashmika : தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் கீதா கோவிந்தம்.

யோகி பாபுவின் புது வீட்டை பார்த்தீங்களா? – ரசிகர்களை மெர்சலாக்கிய புகைப்படங்கள்.!

இந்த படத்தில் நாயகியாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் ராஷ்மிகா.

இவர் தளபதி 63 படத்தின் மூலமாக தமிழுக்கு வருவதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் பிறகு அவை அனைத்தும் வதந்தி என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு தகவல் வைரலாகத் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி தேவ் படத்தை தொடர்ந்து ரெமோ பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவிடம் தான் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

இதனால் அவர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.