சிம்பு நடிப்பில் தயாராகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதியை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்புவின் நடிப்பில் திரையில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கயாடு லோக்கர் மற்றும் சித்தி இட்னானி என்று இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர் வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசை புயலான ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்திற்கான டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அண்மையில் இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடுவதற்கான முழு உரிமையை பிரபல விநியோக நிறுவனமான “யுனைடெட் இந்தியன் எக்ஸ்போர்ட்ஸ்”நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அந்நிறுவனம் இணையத்தில் பதிவிட்டு இருந்தது.

அதேபோல் தற்போது தமிழக தியேட்டர் விநியோக உரிமையை உதயநிதியின் “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அந்நிறுவனம் ஒரு ஸ்பெஷல் வீடியோ மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளது.

அதில் இதற்கு முன் சிம்பு – கெளதம் மேனன் காம்போவில் உருவான விண்ணை தாண்டி வருவாயா படத்தை 2010 ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் முவிஸ் தான் வெளியிட்டது என்றும் இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கெளதம் மேனன் – சிம்பு கூட்டணியில் தானும் இணைந்துள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெருமையுடன் இந்தப் பதிவை தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.