STR 39

சிம்பு மற்றும் சுசீந்திரன் இணைந்துள்ள படத்தின் சூட்டிங் திண்டுக்கல்லில் தொடங்கியதாகவும் இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Simbu Heroine in STR39 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் இன்று ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கொரானா வைரஸ் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்குள் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் திண்டுக்கல்லில் தொடங்கி விட்டதாகவும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Nidhi Agarwal

நிதி அகர்வால் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இயக்குனர் லட்சுமணன் இயக்கியுள்ள பூமி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.