Simbu Fun With Small Boy

குழந்தையுடன் சிம்பு கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

Simbu Fun With Small Boy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சுசீந்திரன் இயக்க பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்துவரும் நிலையில் சிம்பு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.