நிறைய பிரச்சனை இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என மேடையில் கண்கலங்கிய உள்ளார் நடிகர் சிம்பு.

Simbu Emotional on Maanadu Pre-release Event : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருந்த நிலையில் அதன் பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.

யாரையும் பின்பற்றும் எண்ணம், எங்களுக்கு இல்லை : ரோகித் சொல்லும் ‘நியூ’ அடையாளம்..

இந்த நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு மேடையில் பேசும்போது நிறைய பிரச்சனை இருக்கு, அதையெல்லாம் நினைத்தாலே மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு என கண்கலங்கி பேசியுள்ளார்.

அரசியல் செய்து இளைஞர்களை தூண்டிவிடாதீர்கள் – விஜய் பட தயாரிப்பளார் PT.Selvakumar பேட்டி

கண்கலங்கிய சிம்புவுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆறுதல் கூறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனக்காக நாங்க இருக்கோம் தலைவா கவலைப்படாதே என சிம்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.