திருமணம் எப்போது என்ற கேள்விக்கு மேடையில் ஓப்பனாக பதிலளித்துள்ளார் ராஜா ராணி சீரியல் நாயகன் சித்து.

Sidhu About Her Marriage : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. முதல் சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நாயகனாக பிரபல சேனல் ஒன்றில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் நடித்த சித்து நடித்து வருகிறார். நாயகியாக முதல் சீசனின் நடித்த ஆலியா மானசா நடிக்கிறார்.

திருமணம் எப்போது?? விழா மேடையில் ஓப்பனாக கூறிய ராஜா ராணி 2 சித்து.!!

தற்போது விஜய் டிவி அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அறிமுக நாயகன் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மருமகளுக்கு விருது ஆலியா மானசாவிற்கு வழங்கப்பட்டது.

விருது வாங்கிய சித்தியிடம் எப்போது திருமணம் என கேட்டுள்ளனர். அதற்கு நாங்கள் இப்போது காதலித்து வருகிறோம் இன்னும் கொஞ்சம் காதலித்து கொள்கிறோம் திருமணம் அதற்குப் பிறகுதான் என கூறியுள்ளார்.

இவர் திருமணம் சீரியல் இவருடன் இணைந்து நடித்த ஸ்ரேயாவை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.