சத்தம் இல்லாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார் சித்தார்த், அதிதி ராவ்.
தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர் என்ன பன்முக திறமைகள் உடன் வலம் வருபவர் சித்தார்த். இவர் தமன்னாவை காதலித்து வந்த நிலையில் பிறகு பிரேக் அப் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இவர் பிரபல நடிகையான அதிதி ராவ்வை காதலித்து வருவதாக தகவல் பரவியது. அதை உறுதி செய்யும் விதமாக இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி வந்தன.
இருவரும் லிவிங் டு கெதரில் இருந்து வந்த நிலையில் தற்போது தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுவரை இவர்களது திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.