அரசியல் பற்றி ரசிகர் கேட்ட கேள்வியால் கடுப்பாகி உள்ளார் நடிகர் சித்தார்த்.
தென்னிந்திய சினிமாவில் நடிகராக வலம் வருபவர் சித்தார்த். நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு படங்களை பாடியும் உள்ளார்.
இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான டக்கர் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர் ஒருவர் தற்போதயெல்லாம் அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறீர்கள் ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்வியால் கடுப்பான சித்தார்த் இங்கே என்ன பேச வேண்டும் என நன்றாக தெரியும். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என கோபப்பட்டு பதில் அளித்துள்ளார்.