‘ரோஜா’ தொடரில் இருந்து வெளியேறப் போவதாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிபு சூரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது மனமாற்றம் அடைந்துள்ளார்.

Sibu suriyan changed oru decision from Roja serial:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய பிரபலமான சீரியல் தான் “ரோஜா”. இந்த சீரியலில் நடிக்கும் ரோஜா ,அர்ஜுன்  ஜோடிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த மெகா தொடர் ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் தற்போது வரை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிபு சூரியன் தற்போது இந்த சீரியலில் இருந்து விலக போவதாக பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

ரோஜா தொடரில் இருந்து வெளியேறுவதை கைவிட்ட சிபு சூரியன் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

அதாவது “நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன்”, வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன். அதிகம் யோசித்து, ப்ரொடக்ஷன் டீம் அனுமதி உடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன். “Goodbye” சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. 

ரோஜா தொடரில் இருந்து வெளியேறுவதை கைவிட்ட சிபு சூரியன் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல்,  மற்றும் மனதிற்கு நெருக்கமானது. உங்கள் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி. புது ப்ராஜெக்ட்டுகளில் உங்களை என்டர்டைன் செய்கிறேன். “உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசீர்வாதம் எனக்கு தேவை” என சிபு சூர்யன் குறிப்பிட்டு வெளியிட்டிருந்த இந்த பதிவால் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டு இருந்தனர். இந்த முடிவை ஏற்க முடியாத ரசிகர்கள் சிபு சூரியனிடம்  இந்த சீரியலில் நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு ரசிகர்கள் கோரிக்கையை  வைத்துக்கொண்டிருந்தனர்.

ரோஜா தொடரில் இருந்து வெளியேறுவதை கைவிட்ட சிபு சூரியன் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

இதனால் மனமாற்றம் அடைந்த சிபு சூரியன் என் மீது நீங்கள் காட்டும் அளவு கடந்த அன்பிற்கு நன்றி. உங்களின் அனைவரின் கோரிக்கையை ஏற்று ரோஜா சீரியலில் உங்களின் ஃபேவரைட் அர்ஜுன் சாராக தொடருவது பற்றிய யோசிக்கிறேன். சீரியலில் இருந்து விலகும் முடிவையும் மறு பரிசீலனை செய்கிறேன் என்று பதில் அளித்துள்ளார் இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.