எனது லைஃப் பார்ட்னர் யார் தெரியுமா?: ஸ்ருதிஹாசன் ‘ஹாட்’ விளக்கம்

தனது லைஃப் பாட்னர் குறித்து, நடிகை ஸ்ருதி ஹாசன் மனம் திறந்து பேசியதை பார்ப்போம்..
தமிழை விட, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, தமிழில், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தார். கடைசியாக தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த ‘சலார்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ மற்றும் ‘சலார் 2’ ஆகிய படங்கள் உள்ளன.
காதல் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ருதி ஹாசன், பொதுவாக திருமணம் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால், தற்போது இவர் பேசியிருப்பது மேலும் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
‘அதாவது எனக்கு ஒருவருடன் ரிலேஷன் ஷிப்பில் இருப்பது மிகவும் பிடிக்கும். காதலிப்பது மிகவும் பிடிக்கும். யாருடனாவது என்னை இணைத்துக்கொள்ள நான் விரும்பினாலும், இதுவரை எனக்கு மிகவும் ஸ்பெஷலான நபர் என்று யாரையும் கூற முடியாது. அப்படிப்பட்ட நபரை இதுவரை நான் பார்க்கவில்லை. இது என்னுடைய சொந்த சிந்தனை மட்டும் தான்.
திருமணத்தை பற்றி நான் இதுவரை யோசித்தது இல்லை. அதில், எனக்கு இதுவரை ஆர்வமும் இல்லை’ என கூறியுள்ளார்.
ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே, பல காதல் அனுபவங்களை பெற்றுள்ளார். குறிப்பாக, தெலுங்கில் நடிகர் சித்தார்த்துடன் நடித்தபோதும் சித்தார்த் – ஸ்ருதி காதலிப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, 3 படத்தின் போது தனுஷ் – ஸ்ருதி இருவரும் டேட்டிங் செய்வதாக கிசுகிசு எழுந்தது.
பின்னர், லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து, பின்னர் அவரிடம் இருந்து பிரிந்தார். இதனைத் தொடர்ந்து, டூன் டூன் கலைஞர் சாந்தனு ஹசாரிக்கா என்பவரையும் காதலித்து தற்போது பிரிந்திருக்கிறார்.
