கருப்பு நிற புடவையில் கிளாமரில் ஷிவானி நாராயணன் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
Shivani in Black Saree Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்னும் கவர்ந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். குறிப்பாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற புடவையில் படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றது.