தளபதி 67 படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க ஒருவர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

அப்படி போடு.. தளபதி 67 படத்தில் இந்த சூப்பர் ஸ்டார் நடிகரா?? வெளியான வெறித்தனமான அப்டேட்

கேங்ஸ்டர் திரைப்படம் ஆக உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆறு நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் அவர்கள் யார் யார் என்பது பற்றிய தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த நிலையில் கூடுதல் ஸ்பெஷலாக இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்க விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதற்கு நன்றி சொல்லும் விதமாகவே ஷாருக்கான் தளபதி 67 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அப்படி போடு.. தளபதி 67 படத்தில் இந்த சூப்பர் ஸ்டார் நடிகரா?? வெளியான வெறித்தனமான அப்டேட்

விரைவில் இது பற்றிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படம் பற்றி வெளியாகும் அடுத்தடுத்த தகவல்கள் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.