Shankar to do film with Prabhas : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, indian 2. Kamal

Shankar to do film with Prabhas :

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் கமலுக்கும் ஷங்கருக்கும் சண்டை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

நடிகரானார் நரகாசூரன் இயக்குனர் நரேன் கார்த்திக் – எந்த படத்தில் தெரியுமா?

ஆனால் தற்போது இந்தியன் 2-வில் ஷங்கர் முழுவதுமாக வெளியே வந்துவிட்டாராம். எனினும் தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு ஷங்கருக்கு கிடைத்துள்ளது. இப்படத்தை பிரபல பென் மீடியா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பாகுபலி பாணியில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் உருவாகும் இப்படத்தில்தான் தற்போது ஷங்கரின் முழு கவனம் உள்ளதாம். இது முடிந்ததும் விஜய் நடிப்பில் முதல்வன் 2 ஐடியாவையும் ஷங்கர் வைத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.