சன் டிவி சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார் பிரபல நடிகை.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மிஸ்டர் மனைவி. இந்த சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார் ஷபானா.
செம்பருத்தி சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகு சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போதைய திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பலமுறை யோசித்து மனதை திடமாக்கிக் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இதோ அந்த பதிவு