செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் தனக்கு குழந்தை பிறந்து விட்டதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளார். ஆனால் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இதையடுத்து இவருடன் சீரியலில் இணைந்து நடித்த அர்ணவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போதைய இவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் செல்லம்மா சீரியல் நடித்து வரும் அன்ஷிதா என்பவரிடம் நெருக்கம் காட்டி வருவதாக சொல்லி குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் பொருளாதார நிலைமை காரணமாக பிரசவம் வரை சீரியல் நடித்து வந்த இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்த இவரது பதிவு இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/Cqu3VVuv0RE/?igshid=YmMyMTA2M2Y=