இன்னமும் டி என் ஏ டெஸ்ட்டை வைத்து இயக்குனர்கள் சீரியல்களை உருட்டி வருவதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஆரம்பித்து வைத்தது தான் இந்த டிஎன்ஏ டெஸ்ட் விவகாரம். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தொடங்கிய டிஎன்ஏ டெஸ்ட் கதைக்களம் தற்போது தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் அரங்கேறி வருகிறது.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வெற்றி சுடர் தன்னுடைய குழந்தை தான் என்பதை கண்டுபிடிப்பதற்காக டி என் ஏ டெஸ்ட் எடுக்க போவதாக சொல்லி வருகிறார்.

அதேபோல் தற்போது விஜய் டிவியை காட்டிலும் ஜீ தமிழ் பல்வேறு சீரியல்களில் டி என் ஏ டெஸ்ட்டை வைத்து உருட்ட தொடங்கியுள்ளது.

மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் கனா சீரியலில் ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில் ஹீரோயின் அன்பரசி உண்மையாகவே சந்திரசேகர் மகள் தான் என்பதை நிரூபிக்க வேண்டும், அதற்காக அன்பரசிக்கு டி என் ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என சொல்கிறார்.

இதனால் இந்த சீரியலும் டிஎன்ஏ டெஸ்ட்டை வைத்து கதை நகர தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலிலும் சரண்யாவுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என அவரது மாமியார் சொல்ல ரங்கநாயகி அதற்கு மறுப்பு தெரிவிக்க சக்தி யாருக்கும் தெரியாமல் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க பூஜா செய்த சதியால் டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் மாற்றப்பட்டு ஒரு பிரச்சனை வெடிக்கிறது. இப்படி இந்த சீரியலும் டிஎன்ஏ டெஸ்ட் வைத்து நகர தொடங்கி இருப்பது ரசிகர்களை வெறுப்படையச் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ராணி உண்மையான பொம்மி தான் என்பதை கண்டுபிடிக்க டி என் ஏ டெஸ்ட் எடுத்து நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க அந்த கதையும் டிஎன்ஏ டெஸ்ட்டை வைத்து நகர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய் டிவியில் காவியா கர்ப்பமாக இருக்க அந்த விஷயம் பார்த்திக்கு தெரியாமல் இருந்து வர ஜீவாவுக்கு மட்டும் தெரிய வந்ததை வைத்து வில்லி பார்த்தியிடம் கொளுத்தி போட அதனால் காவியாவிடம் அவன் சண்டை போடுகிறான். இதனால் இந்த சீரியலிலும் டி.என்.ஏ டெஸ்ட் கதை தலை தூக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.