எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்ப்பமாகி உள்ளார் சீரியல் நடிகை நிஷா கணேஷ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் வில்லியாக நடித்தவர் நிஷா கணேஷ். அது மட்டுமல்லாமல் மேலும் சில சீரியல்களில் நடித்த இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணேஷ் வெங்கட்ராமன் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகி உள்ளார் நிஷா கணேஷ். இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள பிரக்னன்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.