இன்னும் தொடங்கவே தொடங்காத தளபதி 66 படத்திற்கு செந்தில் ராஜலட்சுமி பாட்டு பாடியதாக தகவல் வெளியான நிலையில் விளக்கம் அளித்துள்ளனர்.

Senthil Rajalakshmi About Thalapathy66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

ஹாக்கி தர்பார் : ஜப்பானை வீழ்த்தி, இந்தியா ஹாட்ரிக் வெற்றி; கள விவரம்..

இந்த நிலையில் இந்த படத்திற்கான கம்போஸ் செய்யும் வேலையை தமன் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்திற்காக செந்தில் ராஜலட்சுமி ஆகியோர் ஒரு பாடலைப் பாடி இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.

இதுகுறித்து செந்தில் ராஜலட்சுமி அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஏனென்றால் இதில் சிறிதளவு கூட உண்மை இல்லை. இது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளனர்.

👗எங்க போனாலும் நம்ம கண்ணுக்கு இதான் மாட்டுது💃 – Pandian stores Hema Shopping Atrocities😂 | Velavan