
இன்றைய எபி -சோட்டில் வனஜாவின் சதியில் பார்வதி கண்டிப்பாக சிக்குவாள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இனி நேற்று ஆதி, பார்வதியும் ஒன்றாக அறையில் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்பதற்கு வனஜா அங்கு வருகிறார். அப்பொழுது ஆதி, பார்வதியிடம் அன்பாக பேசிக்கொண்டிருந்தார்.
பார்வதி அவரிடம் இருந்து விலகி ஓடி வரும் பொழுது வனஜா மீது மோதி விடுகிறார். உடனே வனஜா ஆத்திரத்தில் பார்வதியை திட்டுகிறார். அடுத்து தீபாவளியை முன்னிட்டு அலுவலகத்தில் வேலைச் செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன், போனஸ் தருவதற்காக அவரவர் ஒவ்வொரு யோசனை சொல்கிறார்கள்.
இறுதியாக ஆதி ஊழியர்கள் அனைவருக்கும் 2 சவரன் நகையின் பணமதிப்பு எவ்வளவோ அவ்வளவு பணத்தை கொடுத்து விடலாம். அது அவர்களுக்கு பல விதத்தில் பயன்படும் என்கிறார் ஆதி. அனைவரும் இந்த யோசனையை சரி என்கின்றனர்.
பார்வதியின் வீட்டில் அவளது தம்பி பாடல் காட்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பார்வதி அங்கு வருகிறாள். அந்த பாடலில் கதாநாயகன் காதலியை தூக்கிச் செல்வது போல் பாடல் காட்சி அமையும். இதே போல் ஆதி, தன்னை தூக்கி வந்தததை நினைத்துப் பார்த்து, அந்த கதையை தன் தம்பியிடம் சொல்கிறார்.
அப்பொழுது ஆதி அங்கு வந்து விடுகிறார். ஆதியைப் போல் பார்வதி செய்யும் மிமிக்ரியை ஆதி பார்த்து ரசிக்கிறார். அப்பொழுது சுந்தரம் அங்கு வருகிறார். ஆதி சுந்தரத்தை பார்த்த உடனே மாமா என்கிறார். இறுதியில் ஒரு வழியாக சமாளித்து விடுகிறார்.
அகிலா வீட்டில் கொலு வைப்பதற்காக பார்வதி பொம்மைகளைஅடுக்குகிறாள். அப்பொழுது பார்வதி கோர்ட் அணிந்த பொம்மையை ஆதி என்றும் தாவணி அணிந்த பொம்மையை நான் தான் என்றும் கண்களால் பேசிக் கொள்கின்றனர்.
இதைப் பார்த்த வனஜா கோபத்துடன் நிற்கிறார். பார்வதி, ஆதியின் காதல் லீலைகள் தொடருமா? வனஜாவின் சதி திட்டம் தொடருமா ?அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.