விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் பிரபல நடிகரான அல்லு அர்ஜுனின் ஆஹா OTT தளத்தில் வெளியாக உள்ளது என்ற செய்தியை இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

“தர்மதுரை” படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் தான் “மாமனிதன்”. இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து பலரின் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படம் விரைவில் நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பதை சீனு ராமசாமி அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் “மாமனிதன்” திரைப்படத்தை ஆஹா இணைய வழியில் விரைவில் சந்திக்கலாம். என்னை சமூக வலைதளத்தில் தொடர்ந்து வரும் நெஞ்சங்கள் ஒவ்வொருவரும் ஒரு முறை இப்படைப்பை காணவேண்டு மென விரும்புகிறேன்”என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.