மாமனிதன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சீனு ராமசாமி ஒரு  நேர்காணலில் பேட்டி அளித்துள்ளார் அதில் இப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கு முன்பாக நடிக்க வேண்டியது அஜித் தான் என்று   கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தர்மதுரை” படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம்தான் “மாமனிதன்”. இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பாக இவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு  இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

மாமனிதன் அஜித் நடிக்க வேண்டிய படம்.. சீனு ராமசாமி வெளியிட்ட ஷாக் தகவல்.!!

சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படம் தொடர்ந்து பலரின் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக இயக்குனர் சீனு ராமசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நேர்காணலில் கலந்துகொண்டு, பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மாமனிதன் அஜித் நடிக்க வேண்டிய படம்.. சீனு ராமசாமி வெளியிட்ட ஷாக் தகவல்.!!

அதாவது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சீனு ராமசாமியிடம் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோ நடிப்பதாக இருந்தால் யார் நடித்திருப்பார்? என்ற கேள்வியை கேட்டுள்ளார். இதற்கு சீனு ராமசாமி அவர்கள் நான் முதன் முதலில் இந்த கதாபாத்திரத்தில் ‘அஜித்தை’ நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால், அது நடக்கவில்லை  என்று கூறியுள்ளார். தற்போது இவர் அளித்துள்ள இந்த பதில்  இணையத்தில் வைரலாகி வருகிறது.