Security Short Film Review
Security Short Film Review

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் கவர்ந்த ஷார்ட் பிலிம்மாக செக்யூரிட்டி குறும்படம் உருவெடுத்துள்ளது.

Security Short Film Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயா. நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த இவர் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது இவர் செக்யூரிட்டி என்ற குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த குறும் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

நம்முடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு அப்படி இருக்கக் கூடாது என அப்துல்கலாம் கூறியதை அடிப்படையாக கொண்டு டீசர் வெளியானது. இதனை இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா வெளியிட்டிருந்தார். நல்ல கருவைக் கொண்ட குறும் படமாக செக்யூரிட்டி உருவாகி இருப்பதாக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் பாராட்டி இருந்தார்.

நெல்லையில் 196.75 கோடி மதிப்பிலான திட்டங்கள், மதுரைக்கு ரூபாய் 1200 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் – முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

இதனையடுத்து இந்த குறும்படமும் யூடியூப் பக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறும்படத்தைப் பார்த்த தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் உதயா இயக்கி நடித்துள்ள செக்யூரிட்டி பார்த்தேன். காமெடியா தொடங்கி எமோஷனலா கொண்டு போயிருக்காங்க ரொம்ப அருமையா இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் உதயா மணிக்கு 25 ஆண்டுகளாக தெரியும். செக்யூரிட்டி என்ற தலைப்போடு நல்ல குறும்படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்குள்ள ஒரு நல்ல இயக்குனரும் கதாசிரியரும் இருக்கிறார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. தேசப்பற்றை பின்னணியாக வைத்து இந்த குறும்படத்தை எடுத்திருக்காரு என பாராட்டியுள்ளார்.

நடிகர் சாந்தனு இந்த குறும்படம் பற்றி கூறியுள்ளதாவது முதலில் நடிகர் உதயாவிற்கு பாராட்டுக்கள். அவர் எடுத்துள்ள இந்த கரு ரொம்ப அருமையான ஒன்று. நாம எதை மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பதை அழகாய் சொல்லி இருக்காங்க என தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான மனோபாலா நடிகர் உதயா ஒரு சின்ன விஷயம் யாரும் தொடாத விஷயத்தை எடுத்து மனதைத் தொடும் அளவிற்கு மிகவும் அருமையான குறும்படத்தை இயக்கியுள்ளார் என பாராட்டியுள்ளார்.

மன நிறைவை கொடுக்கும் அளவில் நடிகர் உதயா செக்யூரிட்டி என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். பொழுதுபோக்கா இல்லாம விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு குறும்படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ்.

நடிகரும் இயக்குனருமான சீமான் ஒரு முழுநீள திரைப்படத்தை விட அந்த குறும்படம் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. தோற்றத்தை மாற்றி மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாய். இயக்குனராகும் உன்னுடைய திறமையை சரியாக வெளிப்படுத்தி இருந்தார் என பாராட்டியுள்ளார்.

ஒரு சிறந்த கருவை எடுத்து 20 நிமிஷத்துக்குள்ள நல்ல கதையா கொடுக்கிறது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம் அதை செக்யூரிட்டி குடும்பத்தின் சூப்பரா செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஏ எல் விஜய். குறும்படத்தின் கரு, இசை எடிட்டிங் ஒளிப்பதிவு என அனைத்தும் தரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா அவர்கள் நடிகர் உதயாவிற்குள் இப்படி ஒரு திறமை இருப்பது இந்த குறும்படம் மூலம் தெரியவந்துள்ளது. விரைவில் அவர் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கலாம். வலுவான டயலாக்குகளுடன் வந்திருப்பதாக அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் பிளாக் பாண்டி உதயா அண்ணா மிரட்டி விட்டாரு, நான் உதயா அண்ணா ஏதோ பண்ணி இருக்காரு அப்படின்னு தான் பார்த்தேன்‌. ஆனால் உண்மையாகவே வேற லெவல் எனத் தெரிவித்துள்ளார். இந்த குறும்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

என்னுடைய நண்பன் உதயா கிட்ட இப்படி ஒரு திறமையா என வியக்க வைத்துள்ளார். மிரட்டிட்டாரு, ஒரு மூணு நிமிஷத்துக்கு கொள்ளவே எங்க கொண்டு போகப் போறாங்க அப்படி என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிட்டாங்க என கூறியுள்ளார், நல்ல கான்செப்ட் அருமையா பண்ணியிருக்காங்க என பாராட்டியுள்ளார் மனோஜ் பாரதிராஜா.

ஒரு வருடத்தை நிறைவு செய்த நேர்கொண்ட பார்வை.. அஜித்தை பற்றி ஷர்த்தா ஸ்ரீநாத் வெளியிட்ட பதிவு – இப்போ என்ன சொல்றார் பாருங்க!

நடிகர் உதயா இயக்குனரா ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்‌. உண்மையாகவே உதயா தான் டைரக்ட் பண்ணார் என சந்தேகம் வரும் அளவுக்கு அருமையா குறும்படத்தை இயக்கியிருக்கிறார். நிச்சயமா விருது கிடைக்கும் கிடைக்கும் என பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இவர்கள் மட்டுமல்லாமல் நடிகர் ஆரி, டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நடிகை ஆர்த்தி மற்றும் கணேஷ், குட்டி பத்மினி, இசையமைப்பாளர் அம்ரேஸ், இயக்குனர் கழலி, நடிகர் சௌந்தரராஜன் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் மறைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவி அவர்கள் இந்தக் குறும்படத்தைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் சமூக வைரலாகி வருகிறது.

YouTube video