முதல் முறையாக நடிகர் சூர்யா படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Secrets of JaiBhim Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சூரரை போற்று. சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய்பீம் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

மிகவும் மோசம் : மன்மோகன் சிங் வருத்தம்

முதல் முறையாக படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடித்துள்ள சூர்யா - அதுவும் எந்த படத்தில் தெரியுமா??

முன்னாள் பத்திரிக்கையாளர் ஞானவேல் என்பவர் ஜெய் பீம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ், ரஜிஷ விஜயன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். படம் முழுவதும் அவர் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி