
முதல் நாளுக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் வசூலை அறிவிக்காமல் இருந்து வர விஜய் கண்டிஷன் தான் காரணம் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படம் முதல் நாளில் இந்திய அளவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் இல்லையோ தான் என்று கூறி அதன் வசூல் 148.5 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அதன் பிறகு தற்போது வரை வசூல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஜெய்லர் படத்தின் ரிலீஸ் போது படத்தின் வசூல் 600 கோடி 700 கோடி என ரசிகர்கள் உருட்ட கடைசியாக சன் பிக்சர்ஸ் 525 கோடி தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை விஜய் ரசிகர்கள் கலாய்த்து எடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தை காட்டிலும் குறைந்த திரையரங்குகளில் வெளியான லியோ எப்படி அதிக வசூலை பெற முடியும் என்ற கேள்வி எழுந்தது. மேலும் தளபதி விஜய் தினமும் வசூல் நிலவரங்களை வெளியிட வேண்டாம் ஒரு வாரம் கழித்து மொத்தமாக வெளியிடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கட்டளையிட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே தற்போது வரை தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என தகவல் ஒன்று வட்டமிட்டு வருகிறது. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? வசூல் வேட்டை நடத்தினா வசூல் நிலவரத்தை வெளியிட்டு இருக்கலாமே என தற்போது ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.