Sathya Jyothi Flims : நடக்க கூடாதுனு அஜித் ரசிகர்கள் நினைத்தது தற்போது நடந்து விட்டது. தயாரிப்பு நிறுவனத்தின் டீவீட்டால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் இன்று வரை பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
ரசிகர்கள் பலரும் 50வது நாள், 100-வது நாள் கொண்டாட்டம் என பல திட்டங்களை தீட்டி உள்ளனர்.
ஆனால் விஸ்வாசம் படத்தை வாங்கியுள்ள இணையதள பார்ட்னரான அமேசான் ப்ரைம் நிறுவனம் 50-ம் நாளிற்குள் படத்தை இணையத்தில் வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்திருந்தது.
தற்போது அந்நிறுவனம் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் வரும் பிப்ரவரி 25-ம் தேதி முதல் அமேசான் பிரைமில் விசுவாசம் படத்தை பார்க்கலாம் என அறிவித்துள்ளது.
இது அஜித் ரசிகர்ளை கொஞ்சம் அப்செட்டாக்கியுள்ளது.
Excited to be associated with leading Digital Platform @PrimeVideoIN for #Viswasam ????️#Viswasam streaming in Amazon Prime from February 25th. https://t.co/dq4kzLr1oB
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) February 19, 2019