Sarkar Vs Petta

Sarkar Vs Petta Collection : பேட்ட வசூல் குறித்து வெளியான தகவல்களால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவிட்ட ட்வீட் பலரின் கண்டங்களுக்கு ஆளாகி வருகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்திருந்த பேட்ட திரைப்படமும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தல அஜித் நடித்திருந்த விஸ்வாசம் படமும் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்தன.

இது தான் வெற்றி, அதிரடியான வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகின்றன.

பேட்ட திரைப்படம் பல இடங்களில் விஸ்வாசத்தை விட அதிக வசூல் செய்திருந்தாலும் தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் தான் முதலிடத்தை பிடித்திருந்தது.

இது குறித்து பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் அவர்களை கண்டிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டது.

அந்த டீவீட்டில் இதுவரை வசூல் என்ன என்பது எங்களுக்கே சரியாக தெரியாது என குறிப்பிட்டுள்ளது.

பேட்ட Vs விஸ்வாசம் – எது மாஸ்? – மக்களின் ஒட்டு இவருக்கு தான்.!

இதனால் இந்த ட்வீட் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கே தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதே பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர்ஸ் சர்க்கார் வசூல் குறித்து ட்வீட் செய்த போது அதனை ரி-டிவீட் செய்த நீங்கள் தற்போது பேட்ட விசயத்தில் இவ்வாறு நடந்து கொள்வது ஏன் என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.