
Sarkar Vs 2.O Collection : சர்கார் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளி புதிய சாதனையை படைத்துள்ளது ஷங்கரின் 2.O.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் 2 பாயிண்ட் ஓ.
உலகம் முழுவதும் நேற்று முதல் திரைக்கு வந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவலும் கிடைத்துள்ளது. முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ 2.64 கோடி வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
சர்கார் படம் முதல் நாளில் சென்னையில் ரூ 2.37 கோடி வசூல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.