Kollywood Movies USA

Kollywood Movies USA :

கஜா புயல் பாதிப்பால் அமெரிக்காவில் சர்கார் படத்தை வெளியிட்ட நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் USA நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

சமீபத்தில் தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான நாகை, புதுக்கோட்டை, திருவாருர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு ஆளாகியுள்ளன.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் தமிழகத்திற்கு ரூ 10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் டெல்டா மாவட்ட மக்களுக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இதுவரை சூர்யா, ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் என பலர் உதவி செய்து உள்ளனர்.

இன்னும் எவ்வளவோ திரையுலக பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சர்கார் படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் USA நிறுவனமும் டெல்டா மக்களுக்காக உதவ முன் வந்துள்ளது.

அதற்காக தஞ்சாவூரில் உள்ள தாமரை பவுண்டேஷன் தஞ்சை என்ற நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. அமெரிக்காவில் சர்கார் படத்தின் வரும் வியாழக்கிழமை வசூல் முழுவதையும் டெல்டா மக்களுக்கு கொடுத்து உதவ உள்ளதாக அறிவித்துள்ளது.

கோலிவுட் மூவிஸ் USA நிறுவனத்தின் இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here