
Sarkar Release Info : தளபதி விஜயின் சர்கார் படம் குறித்து கூகுளில் குறிப்பிட்டுள்ள ரிலீஸ் தேதியால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி என பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் தீபாவளி ( நவம்பர் 6 ) அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகி ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை தொடங்கி விட்டனர்.
ஆனால் கூகுள் மற்றும் விக்கிபீடியாவில் சர்கார் ரிலீஸ் தேதி நவம்பர் 7 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சிலர் குழப்பமடைந்துள்ளனர்.
இது ஒரு புறம் இருந்தாலும் தளபதி ரசிகர்கள் எது எப்படி இருந்தாலும் இந்த வருட தீபாவளி எங்களுடைய தளபதி தீபாவளி தான் என மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
சர்கார் FDFS டிக்கெட் புக்கிங்கிற்காகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். நவம்பர் 2-ம் தேதியான நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக சென்னையில் டிக்கெட் புக்கிங் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.