
பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டதாக கண்ணன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Saravana Vikram About Pandian Stores Last Day Shooting : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணனாக நடித்து வருகிறார் சரவணன் விக்ரம்.

இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவியின் தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். இதனால் இனி அடுத்து கண்ணனாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் சரவணன் விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது இன்னைக்கு தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலோட கடைசி நாள் ஷூட்டிங் என சரவணன் விக்ரம் வீடியோ வெளியிட்டுள்ளார். கண்ணனாக தனக்கு ஆதரவு கொடுத்தது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ