Saravana Stores Arul Movie

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினியாக யார் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் முதலாளியான அருள் அவரது கடையின் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து நடித்து பிரபலமானார்.

விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் நடிக்கவும் ஆசை வர இவரை வைத்து விளம்பர படங்களையும் பிரபல சீரியல் ஒன்றையும் இயக்கிய இரட்டையர்களான ஜேடி-ஜெரி ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க படக்குழு நயன்தாராவை அணுக அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

அதே போல ஹன்ஷிகா தான் ஹீரோயின் என வைரலாக பதறி போய் நான் இல்லை என விளக்கம் கொடுத்தார்.

இதனால் அருள் அண்ணாச்சியின் பார்வை தமன்னாவின் பக்கம் திரும்பியுள்ளதாம்.

இந்த தகவலுக்கு தமன்னாவும் இதுவரை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பதால் ஒருவேளை இது உண்மை தானோ என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.