பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரஜினி விரும்பிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று சரத்குமார் பேசியுள்ளார்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

ரஜினி விரும்பிய கேரக்டரில் நான் நடித்திருப்பது பெருமை…!! சரத்குமாரின் பேச்சு வைரல்!.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மாபெரும் பொருட்சளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரஜினி விரும்பிய கேரக்டரில் நான் நடித்திருப்பது பெருமை…!! சரத்குமாரின் பேச்சு வைரல்!.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் தற்போது இப்படத்தில் சரத்குமார் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை குறித்து பேசியுள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அவர், பழுவேட்டையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர் கதையைப் படிக்கும் போதே அவரது வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த மணிரத்தினத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது, ஆனால் ரஜினி நடிக்க விரும்பியதை நான் பெருமையாக கருதுகிறேன்” என்று பேசியுள்ளார்.