உயரம் தாண்டுதல் இந்திய அணியின் வீரர் சரத்குமார். இவர் 2வயதில் முடக்குவாதத்தால் அவதிப்பட்டார்.ஆனால் இப்பொழுது அதனை சாதனையாக மாற்றி இருக்கிறார்.

நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இவர் இரண்டாவது முறையாக பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

இதற்கு முன்னதாக தனது 26 வயதில் அவர் இந்தியாவிற்கு தனது முதல் பதக்கத்தை பெற்று தந்ததும் இல்லாமல் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் போட்டியிலும் தங்கம் வென்று தந்துள்ளார்.

பீகாரை சேர்ந்த சரத்குமார் நமது இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்ததும் இல்லாமல், தனது அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல முன்னோடியாகவும் இருக்கிறார்.

மேலும் இந்திய இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார்.