Santhosh Shivan About Vijay's Next Movie
Santhosh Shivan About Vijay's Next Movie

விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி2 அல்ல என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.

Santhosh Shivan About Vijay’s Next Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

பயப்படாத என்ன நடந்தாலும் நீதான் டைரக்டர்.. அறிமுக இயக்குனருக்கு அஜீத் கொடுத்த நம்பிக்கை – வெளியான தகவல்.!

இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டு வந்தது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு இருந்ததால் இதை மேலும் உறுதி செய்யப்பட்ட தகவலாகவே ரசிகர்கள் கொண்டாடினர்.

ஆனால் தற்போது இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது நான் துப்பாக்கி படம் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளேன்.

இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட் அல்ல எனக் கூறியுள்ளார். இதனால் விஜயின் அடுத்த படம் துப்பாக்கி 2 இல்லை என கூறப்படுகிறது.