சூர்யாவும் ஜோதிகாவும் கோபப்பட மாட்டார்கள்: சந்தானம் சுவாரஸ்ய பேச்சு..

Web Ads

‘உயிரின் உயிரே’ பாடல் ரீ கிரியேட் பற்றி சந்தானம் தெரிவித்த தகவல்கள் காண்போம்..

சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் 2-வது பாகத்தில் செல்வராகவன், கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் இணைந்துள்ளனர். இப்படம், வருகிற 16-ந்தேதி ரிலீஸாகிறது.

இப்படத்தில் ‘காக்க காக்க’ படத்தில் வரும் ‘உயிரின் உயிரே’ பாடலை யாஷிகா ஆனந்த்தையும், கௌதம் மேனனையும் வைத்து ரீ கிரியேட் செய்துள்ளனர். இது வரவேற்பை பெற்றிருக்கிறது.

இது குறித்துப் பேசிய சிம்பு, ‘நான் எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வேன். எங்கள் டைரக்டரை (கௌதம்) இப்படி செய்திருக்கீங்களே. அதை மட்டும் ஏற்றுக் கொள்ளமாட்டேன்’ என ஜாலியாக பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்து சந்தானம் தெரிவிக்கையில், ‘டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘உயிரின் உயிரே’ பாடலை பார்த்து சூர்யாவும், ஜோதிகாவும் அவர்களின் ரசிகர்களும் கோபப்படமாட்டார்கள். ஏனெனில், அந்தப் பாடலை இயக்கிய கௌதம் மேனனே அதில் நடித்திருக்கிறார். படம் பார்க்கும்போது அந்தப் பாடல் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல், நான் திருப்பதி பெருமாள் பக்தன். ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும் திருப்பதிக்கு நடந்து செல்வேன். இப்படத்தின் பாடலில் நாங்கள் பெருமாளை கிண்டல் செய்யவில்லை. சென்சார் போர்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ‘கோவிந்தா கோவிந்தா’ பாடல் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

santhanam says suriya and jyothika angry over the song
santhanam says suriya and jyothika angry over the song