
ஒளிபரப்பாக தொடங்குவதற்கு முன்பே விஜய் டிவி சீரியல் இருந்து விலகி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் சஞ்சீவ். இதைத் தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் ஒன்றிலும் நடித்தார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி வெகு விரைவில் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த சீரியலில் பூவே பூச்சூடவா ரேஷ்மா உட்பட பலர் நடிக்கின்றனர். சூட்டிங் தொடங்கிய ஒரே வாரத்தில் இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவருக்கும் ஜோடி பொருத்தம் சரியாக வராத காரணத்தினால் இவர் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரேஷ்மா அளவிற்கு ஜோடியாக நடிக்க பூவே பூச்சூடவா தினேஷ் போன்ற சில நடிகர்கள் தான் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சஞ்சீவ் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த தகவலில் ஆமாம் இந்த ப்ராஜெக்ட்டில் இப்போது நான் இல்லை. அதற்கான காரணங்களை மீடியாவில் நான் சொல்ல விரும்பவில்லை விரைவில் புதிய ப்ராஜெக்ட்டில் சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.