Sanjay First Movie in Vijay Sethupathi Production
Sanjay First Movie in Vijay Sethupathi Production

விஜய் சேதுபதி தயாரிப்பில் தளபதி விஜயின் மகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Sanjay First Movie in Vijay Sethupathi Production : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்துள்ளது.

பட்ஜெட் 8 கோடி, ஆனால் வசூல் எத்தனை கோடி தெரியுமா? அதிர வைத்த சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மொத்த வசூல் விவரம்.!

இந்த நிலையில் தெலுங்கு படமான உப்பெனா படத்தின் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி கைப்பற்றியுள்ளார்.

இந்த கதையை தளபதி விஜயிடம் அவர் கூற இது என் மகன் சஞ்சய்க்கு பொருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார். இதனை அடுத்து விஜய் சேதுபதி சஞ்சய் நடிப்பதாக இருந்தால் இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என கூறியுள்ளார்.

ஒருவேளை விஜய் இந்த படத்தில் தன் மகனை நடிக்க வைக்க ஒப்புக்கொண்டால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறும் என கூறலாம்.