ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு நடந்த வளைகாப்பு.. குவியும் வாழ்த்து..!

ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், டாக்டர், நாய்சேகர் ரிட்டன்ஸ், போன்ற பல படங்களில் தனது காமெடி திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் இவருக்கு நல்ல புகழை வாங்கி தந்தது. இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சங்கீதாவிற்கு 46 வயதாகும் நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.
ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையை தற்போது கோலாகலமாக அவர்களுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் பலரும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.
View this post on Instagram