சம்சாரம் அது மின்சாரம் 2

34 வருடங்களுக்கு பிறகு சம்சாரம் அது மின்சாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்சாரம் அது மின்சாரம் 2 : தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக இயக்குனராக கதாசிரியராக வசனகர்த்தாவாக வலம் வந்தவர் விசு. இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

34 வருடங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் விசுவின் உதவி இயக்குனர் வி. எல் பாஸ்கர் அவர்கள் இறங்கியுள்ளார்.

இப்படத்திற்கு பரத்வாஜ் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விசுவின் மகள் லாவண்யா இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

படத்தில் விசுவுக்கு பதிலாக அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ராஜ்கிரனிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.