திரையுலகில் உள்ள நடிகைகள் திருமணம் செய்து கொள்ளும் வரை தான் அவர்களுக்கு வாய்ப்பு. திருமணம் செய்து கொண்டால் அவ்வளவு அவர்கள் அம்மா வேடத்திற்கு தான் சரிப்பட்டு வருவார் என்பது தான் திரையுலகில் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

ஆனால் தற்போது இதையெல்லாம் முறியடித்துள்ளார் சமந்தா என்றால் அது மிகையாகாது. கல்யாணம் முடிந்த பிறகும் திரையுலகில் சற்றும் மார்க்கெட் குறையாமல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . மேலும் கடந்த வாரம் சமந்தா நடிப்பில் சீமராஜா, யூ டர்ன் என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தன.

இந்த படங்களின் ப்ரோமோஷன்களுக்காக சமந்தா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது தொகுப்பாளர் சமந்தாவிடம் நீங்கள் அஜித்,விஜயிடம் கேட்க நினைக்கும் கேள்வி என்ன என கேட்டுள்ளார்.