அந்த 3 நாட்களும் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது: சமந்தா ஓபன் டாக்..

நடிகை சமந்தா, தற்போது தயாரிப்பாளராகி இருக்கிறார். இவர், ‘சுபம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.
அந்த பாடத்தை தொடர்ந்து சமந்தா ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து அதில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கும் ஒரு ஹிந்தி வெப் தொடரிலும் நடித்து வரும் சமந்தா, மூன்று நாட்கள் செல்போனை பயன்படுத்தவில்லை என்ற, தகவலை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில்,
‘என் கையில் எப்போதும் செல்போனை வைத்திருப்பது பழக்கமாகி விட்டது. திடீரென, ஒரு நாள் செல்போனின் மீது எனக்கு சந்தேகம் வந்ததை அடுத்து செல்போனை மூன்று நாட்கள் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தேன். யாருடனும் பேசவில்லை, யாரையும் தொடர்பு கொள்ளவில்லை,
யாரும் என்னை வந்து சந்திக்கவும் இல்லை. புத்தகம் படிக்கவில்லை, எழுதவில்லை, எந்த வேலையும் செய்யாமல் மூன்று நாட்கள் என்னுடைய மூளைக்கு ஓய்வு கொடுத்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே எனக்கு இருந்தது. அப்போதுதான் நான் யார், நான் என்ன சாதித்தேன், செல்போன் என்னுடைய நேரத்தை எப்படி எல்லாம் வீணாக்குகிறது என்பதை தெரிந்து கொண்டேன்.
பிறப்புக்கும், இறப்பிற்கும் இடையே இருக்கும் இடைப்பட்ட காலத்தில் செல்போன் நம்மை செயற்கையான விஷயங்களில் மூழ்கடித்து விடுகிறது என்பதையும், நம்முடைய முன்னேற்றத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் செல்போன் எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.
