குழந்தைகளுடன் விளையாடும் சமந்தாவின் க்யூட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. மாஸ்கோவின் காவேரி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த “நான் ஈ” திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்திருந்த சமந்தா தற்போது பாலிவுட் திரை உலகிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீப காலமாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல குணமாகி வருவதோடு அவ்வப்போது ஆன்மீக சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா தனது நெருங்கிய தோழியும், பிரபல பின்னணி பாடகியுமான சின்மயி குழந்தைகளுடன் க்யூடாக விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.