நடிகை சமந்தா பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி குஷி திரைப்படம் வெளியாக உள்ளது. விஜய் தேவர் கொண்ட கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு தற்போது சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்திருக்கும் சமந்தா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விதவிதமான ஆடைகளில் எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நியூயார்க் சிட்டியில் மாடர்ன் புடவையில் ஸ்டைலிஷ் ஆக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.