பிக் பாஸ் நிகழ்ச்சியில் காவாலா பாடலுக்கு நடனமாடிய சல்மான் கான் புகைப்படங்களை தமன்னாவின் காதலர் பகிர்ந்து இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய இடங்களில் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா இப்படத்தில் அனிருத் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் காவாலா பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

இப்பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வருவதோடு தற்போது வரை இணையதளத்தை அதிர விட்டு வருகிறது. இப்பாடலுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தொடர்ந்து ரீல்ஸ் செய்து பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் இப்பாடல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியாகி ரசிகர்களை வைப் செய்ய வைத்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட் திரை உலகின் மாபெரும் உச்ச நட்சத்திரமான நடிகர் சல்மான்கான் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். அதாவது, நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் ஹிந்தி பிக் பாஸ் ஓடிடி ஷோவில் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா அவர் நடித்திருக்கும் “kaalkoot” என்ற வெப் தொடருக்கான ப்ரோமோஷனுக்காக அந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். அப்போது அந்நிகழ்ச்சியில் சல்மான் கான் உடன் சேர்ந்து விஜய் வர்மா காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். அதன் புகைப்படங்களை விஜய் வர்மா தனது இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.