நடிகை சாக்ஷி அகர்வால் பகிர்ந்திருக்கும் பர்த்டே போட்டோஸ் வைரலாகி வருகிறது.
மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் சைடு கேரக்டராக நடித்து வந்த இவர் தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார்.
தற்போது பல முக்கிய திரைப்படங்களில் லீடிங் ரோலில் நடித்து வரும் இவர் அடுத்தடுத்த படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது அழகிய உடையில் கேக் கட்டிங் செய்து தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.