sai Pallavi New Movie
sai Pallavi New Movie

sai Pallavi New Movie : பிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி.

தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.

அதே போல் தெலுங்கில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள்.

அந்தவகையில் அடுத்ததாக இவர் Virata Parvam 1992 என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

ரானா டகுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும் பிரியாமணி, தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கவுள்ளனர்.

இப்படி நட்சத்திரங்கள் பலரும் ஒரே படத்தில் இணைவதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இதுவொரு பீரியட் படம் என்பதால் இப்படத்தில் மேக்கப் இல்லாமல் அவ லட்சணமான ஒரு வேடத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம்.

மேலும் ரோல் பிடித்திருந்ததால் இப்படியொரு ரிஸ்க் எடுக்கிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.