புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்திருப்பதாக புதிய தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா பிடித்திருக்கிறார்.

தெலுங்கு திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தில் இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பான உறுதியான தகவலை படக்குழு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவுடன் வெளியிட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.