Saina Nehwal champion
Saina Nehwal champion

Saina Nehwal champion – இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா மற்றும் கரோலினா மரினும் மோதினார்கள்.

ஆட்டத்தின் முதல் செட்டில் சற்று நேரத்திற்கு பிறகு கரோலினா மரினுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அந்த சமயம் சாய்னா 4 புள்ளிகளுடன் இருந்தார்.

மேலும் கரோலினா 11 புள்ளிகளுடன் இருந்தார். தொடை பகுதியில் காயம் ஏற்படவே கரோலினா ஆட்டம்விட்டு விலகினார்.

எனவே, சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சாய்னா வென்ற முதல் பி.டபுள்யு.எப் பட்டம் இதுதான். மரின் – சாய்னா மோதியுள்ள 12 போட்டிகளில் இருவரும் தற்போது 6-6 என்று சம நிலையில் வகிக்கின்றனர்.

மலேசியா மாஸ்டர்சில் பட்டம் வென்றது குறித்து சாய்னா கூறியது : பைனலில் மரின் காயம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது.

இந்த வகையில் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நானும் காயங்களால் அவதிப்பட்டிருக்கிறேன். மனதளவில் ஆதி எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்துள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here